பக்கம் எண் :


திருச்செந்தூர்737

கருத்துரை

சிவபெருமான் மகிழும் செந்தில் மேய திருமுருகவேளே! அவர்களைப் பாடாமல் உம்மையே பாடி ஒருமொழி புகன்றுய்ய அருளுவீர்

81

   பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்
  பந்தபா சந்தனிற்                          றடுமாறிப்
     பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
  பண்பிலா டம்பரப்                       பொதுமாதர்
   தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்
      சங்கை மால் கொண்டிளைத்                 தயராதே
     தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனைத்
      தந்துநீ அன்புவைத்                      தருள்வாயே
   அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்
      தண்டவே தண்டமுட்                    படவேதான்
     அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
      கண்டலோ கங்கொடுத்                 தருள்வோனே
   திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்
      செஞ்சடா பஞ்சரத்                       துறுதோகை
     சிந்தையே தென்றிசைத் தென்றல்வீசும் பொழிற்
      செந்தில் வாழ் செந்தமிழ்ப்                பெருமாளே.

பதவுரை

அம்கைவேல் கொண்டு-அழகிய திருக்கரத்திலே வேலாயுதத்தை எடுத்துக் கொண்டு, அரக்கன் ப்ரதாபம் கெடுத்து-சூரபன்மனுடைய பெருமையை அழித்து, அண்டவேதண்டம் உள்படவே தான்-அண்டங்களும் மலைகளும் உள்பட யாவும், அஞ்சவே-அஞ்சும்படி, திண்திறள்-திண்ணிய வலிமையுடைய, கொண்டல் ஆகண்டலற்கு-மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனுக்கு, அண்டலோகம் கொடுத்து அருள்வோனே-தேவலோகத்தைத் தந்து அருள்புரிந்தவரே! திங்கள்-சந்திரனையும், ஆர்-ஆத்திமலரையும், கொன்றை-