பக்கம் எண் :


திருச்செந்தூர்741

சங்கைமால் கொண்டு இளைத் தயராதே:-

சங்கை-சந்தேகம். பொதுமகளிர்பால் நட்பு கொள்வோர் அவள் வேறு ஒருவனைக் காதலிக்கின்றாளோ என்று அடிக்கடி ஐயுறுவர்.

மாதவி என்ற கணிகை சிறந்த நெறியும் பண்பும் உடையவள். அவள் கலையில் ஈடுபட்ட கோவலன் அவளுடன் ஒன்றி வாழ்ந்தான். இந்திர விழா நிகழ்ந்தபோது கடற்கரையில் படாம்மனையில் இருவரும் இனிது இன்புற்று உறைந்தார்கள். கானல்வரி என்ற பண்ணை அவள் வீணையில் இசைத்துப் பாடினாள். அவள் உள்ளம் வேறு பட்டனள்போலும் என்று ஐயுற்ற கோவலன் அவளைவிட்டு அகன்றனன். எனவே நல்லொழுக்கம் பூண்ட மாதவியையே கோவலன் ஐயுற்றனன் என்றால், ஒழுக்கமில்லாத கணிகையரைக் காமுகர் ஐயுறுவதில் வியப்பு ஒன்றும் இல்லைதானே?

இனி, ஐயத்துடன் மயக்கமும் அடைவர். காமத்தால் வெகுளியும், வெகுளியால் மயக்கமும் தோன்றும். முருகனுடைய திருவடித் தியானத்தால் இவைகள் நீக்கும்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்
.              -திருக்குறள்.

தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீகம்:-

முருகன் என்றும் மாறாத இளமை நலம் உடையவர். தன்னை வழிபடும் அடியார்க்கு, “மணங்கமழ் தெய்வத்து இள நலங்காட்டி” அருள் புரிவார். இளம்பூரணன் ஆதலின் அவர் திருவடியில் தண்டையும் கிண்கிணியும் இலகுகின்றன.

அரக்கன் ப்ரதாபங் கெடுத்து:-

சூரபன்மன் ஆணவமலம். ஆணவமலம் ஒருபோதும் அழியாது. “உள்ளம் சிதையாது; இல்லது தோன்றாது”