பக்கம் எண் :


742திருப்புகழ் விரிவுரை

என்பது சற்காரிய வாதம். ஆணவமலம் வலிகுன்றி அடங்கி நிற்கும். ஆகவே ஆணவமலமாகிய சூரன், தனது வலிமைக் குன்றி மயிலும் வேலுமாகிய நன்னெறி நின்றான். எனவே முருகன் சூரனைக் கொல்லவில்லை.

 “அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேற்
   கந்தவேள்”   
                        -கந்தபுராணம்

செஞ்சடா பஞ்சரத்துறுதோகை:-

சிவந்த சடையாகிய கூட்டினுள் உறைகின்ற கங்கை. பஞ்சரம்-கூடு. ’எண்குணபஞ்சரனே’ என்று கந்தரநுபூதி 15-யிலும் கூறியிருக்கின்றார்.

சிந்தையே:-

கங்கையின் திருவுள்ளத்தில் எழுந்தருளி யிருக்கின்றவரே! என்பது பொருள். ’சிந்தையாய் நின்ற சிவனே போற்றி’ என அப்பரும், “தெருளிடத் தடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமாளே” என்று மணிவாசகரும் துதிக்கின்றார்கள்.

கருத்துரை

இந்திரனுக்கு அருளிய செந்திற் கடவுளே! பிறவிச் சுழலில் புகாவண்ணம் எளியேனுக்கு திருவடியைத் தருவீர்.

82

   சத்தமிகு மேழுகட லைத்தேனை
      உற்றமது தோடுகணை யைப்போர்கொள்
      சத்திதனை மாவின்வடு வைக்காவி            தனைமீறு
     தக்க மணம் வீசுகம லப்பூவை
      மிக்கவிளை வானகடு வைச்சீறு
      தத்துகளும் வாளையடு மைப்பாவு            விழிமாதர்