மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கனு நடாவுபர விக்கார குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவனி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் பெருமாளே பதவுரை சித்ர வடிவேல் பனிரு கைக் கார - அழகிய கூர்மையான வேலாயுதத்தை ஏந்தியப் பன்னிரண்டு கரங்களையுடையவரே! பக்திபுரிவோாக்ள் பனுவல்கார- அன்பு செய்வோர்களுடைய நூலில் விளங்குபவரே! திக்கினு நடாவு புரவிக்கார- திசைகள் தோறும் நடாத்துகின்ற(மயிலாகிய) குதிரையையுடையவரே! குறமாது சித்த அநுராக கலவிக்கார-வள்ளியம்மையார் உள்ளன்போடு மருவுகின்ற மணவாளரே! துட்ட அசுர ஈசர் கலகக்கார-கொடிய அசுரர் தலைவர்களுடன் போர் புரிந்தவரே! சிட்டர் பரிபால லளிதக்கார-உத்தமர்களைக் காத்தலையே திருவிளையாட்டாகக் கொண்டவரே! அடியார்கள் முத்திப்பெறசொல் வசனக்கார-திருத்தொண்டர்கள் முக்திப்பெறுமாறு உபதேசிக்கின்ற சொற்களை யுடையவரே! தந்தை நிகர் தூய வநிதைக்கார-கிளியைப் போன்ற தூய்மைப் பொருந்திய தெய்வயானையின் கணவரே! முச்சகர் பராவு சரணக்கார-மூன்று உலகங்களும் துதிக்கின்ற திருவடியை யுடையவரே! இனிது ஆன-இனிமை |