மயமான, முத்தமிழை ஆயும் வரிசைக்கார-மூன்று தமிழையும் ஆராய்கின்ற சிறப்புடையவரே! பச்சை முகில் தாவு புரிசைக்கார-பச்சை நிறமான மேகங்கள் தழுவுகின்ற உயர்ந்த திருமதிலைக் கொண்ட திருக்கோயில்களை யுடையவரே! முத்துலவு வேலை நகர்-முத்துக்கள் கரையில் உருளுகின்ற கடற்கரையில் உள்ள செந்திமாநகரில் எழுந்தருளியுள்ள, மு தேவர்-மூன்று மூர்த்திகளும் தொழுகின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! சத்தமிகும் ஏழு கடலை- ஓசை மிகுந்த ஏழு சமுத்திரங்களையும், தேனை-வண்டையும், மது உற்ற தோடு-தேன் நிறைந்த மலரையும், கணையை-அம்பையும், போர் கொள் சக்தி தனை-போர் புரிகின்ற வேலையும், மாவின் வடுவை-மாவடுவையும், காவி தனை-கருங்குவளையையும், மீறு தக்க மணம் வீசு கமலப்பூவை-மிகுந்த இனிய வாசனையை வீசும் தாமரை மலரையும், மிக்க விளைவான கடுவை-நன்கு முதிர்ந்த நஞ்சையும், சீறு உதத்து உகளும் வாளை-சினத்துடன் நீரில்பாய்ந்து விளையாடும் வாளை மீனையும் நிகர்த்து, அடு-கொல்லுந் தொழிலைக் கொண்டு, மை பாவும் விழி மாதர்-மைதீட்டிய கண்களையுடைய பொதுமகளிரினது, மத்தகிரிபோலும்-மதம் பொழிகின்ற (யானை) மலை போலபருத்து, ஒளிர் வித்தார-ஆபரணங்களுடன் கூடிய ஒளி செய்து விசாலமுள்ளதாய்,! முத்து வடமேவும்-முத்துமாலை யுடையதாய், எழில் மிக்கான வக்கிர கிரீட நிகர்-அழகு மிகுந்த வஜ்ரமணி மகுடத்திற்குச் சமான முள்ளதாய், செப்பு ஆன-சிமிழ் போன்றதாய் விளங்கும், தனமீதே-தனங்களின் மீது, வைத்த கொடிது ஆன மயல் விட்டு-மனம் வைத்துள்ள தீய மயக்கத்தை விடுத்து, ஆன பக்தி செய-ஆன்மாவுக்கே உரியதான அன்பு செய்யுமாறு, ஏழை அடிமைக்காக.-அறிவில்லாத இந்த அடியேன் பொருட்டு, இனி வஜ்ர மயில் மீதில்-இனியாவது வஜ்ரம் போல்ஒளி செய்கின்ற மயிலின் மீது, எப்போது வருவாயோ-எந்தக்காலம் வந்து ஆட்கொள்வீர்? பொழிப்புரை அழகிய கூரிய வேலையேந்திய பன்னிருகைப் பரமனே; அன்பு புரிவோர்கள் பாடிய நூல்களை யுடையவரே! திசைகள் தோறும் நடாத்துகின்ற மயிலாகிய குதிரையை யுடையவரே! வள்ளிநாயகி உள்ளம் உவந்து மருவும் மணவாளரே! தீய அசுர வேந்தருடன் போர்புரிந்தவரே! நல்லவர்களைக் காத்து அவர்களுடன் ஆடல் புரிபவரே! அடியவர்கள் முத்திப்பெறுமாறு உபதேசிக்கின்ற சொற்களை யுடையவரே! கிளிபோன்ற தூய தெய்வயானையம் |