பக்கம் எண் :


திருச்செந்தூர்745

மையின் கணவரே! மூன்று உலகங்களும் துதிசெய்கின்ற திருவடியை யுடையவரே! இனிமை நிறைந்த முத்தமிழை ஆராய்கின்ற மேன்மையானவரே! பசிய மேகந் தவழ்கின்ற மதிலையுடைய கோயிலில் விளங்குபவரே! முத்துக்கள் உலாவுகின்ற கடற்கரையுடன் கூடிய செந்திலம்பதியில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் போற்றும் பெருமித முடையவரே! ஓசை மிகுந்த ஏழுகடல், வண்டு, தேன் மிகுந்த மலர்க்கணை, போர் புரிகின்ற வாள், மாவடு, கருங்குவளை, சிறந்த மணம் வீசுகின்ற தாமரை மலர், நன்கு முதிர்ந்த நஞ்சு, சீறி நீரில் விளையாடுகின்ற வாளைமீன் இவைகளை நிகர்த்து, கொல்லுந் தன்மையுடன் மை தீட்டிய கண்களையுடைய பொது மகளிரது மதம் பொழிகின்ற மலைபோல் பருத்து ஆபரணங்களுடன் கூடி ஒளி செய்து, விரிந்து முத்துமாலை புனைந்து, அழகிய வஜ்ரமுடி போலவும் சிமிழ் போலவும் திகழ்கின்ற தனபாரங்களின் மீது மனம்வைத்து, அதனால் வந்த கொடிய மயக்கத்தை விடுத்து, உமது திருவடியில் அன்பு செய்யுமாறு, அடியேன் பொருட்டு, வஜ்ரம்போல் ஒளி செய்யும் மயில் வாகனத்தின் மீது வந்து எந்நாள் காட்சித் தருவீரே?

விரிவுரை

சத்தமிகு மேழுகடலை:-

மகளிரது கண்களுக்கு உவமை பல வுள. அவற்றில் சில இந்தப்பாடலில் வருகின்றன. கடல் அகலமும் ஆழமும் கருமையும் உள்ளது. அதுபோல் மகளிரது கண்களும் அகலமும் ஆழமும் கருமையும் பொருந்தியவை.

தேனை:-

தேன்-வண்டு; தேனையுண்பதனால் வண்டு இப்பேர் பெற்றது. இது உயர்ந்த வண்டு; இது பசித்தாலும் தேனையன்றி வேறு ஒன்றை யுண்ணாது. அதுபோல் ஆன்றோர்