பக்கம் எண் :


746திருப்புகழ் விரிவுரை

என்ன இடர் நேர்ந்தாலும் அறத்தையன்றி மறத்தைச் செய்யார். தூய கேள்வியன்றி தீய சொற்களைக் கேளார். நற்சிந்தனையன்றி துர்ச்சிந்தனை எண்ணார்.

மற்றொரு கருவண்டுளது. அது மலத்தையன்றி வேறு ஒன்றையும் உண்ணாது. அதனையே உருட்டியுழலும். அது போல் சில கீழ்மக்கள் தீமையே நினைத்து தீமையே பேசித் தீமையே செய்வர். இவர்களாலும் உலகிற்கு அதிக ஆபத்திராது.

இனி அதிகக் கேடு செய்கிற பிராணி மற்றொன்றுண்டு. அதுதான் ஈ. அது சந்தனத்திலும் அமரும்; சாணத்திறிலும் மற்றொன்றிலும் அமரும்; அதுதான் கேடு விளைவிக்கும் பிராணி; அது போல் சிலர் நல்ல திருக்கூட்டங்களிலும் கலந்து கொள்வர். தெய்வ சிந்தனை, குரு நிந்தனை புரிகின்ற தெருக் கூட்டத்திலும் கலந்துகொள்வர். அவரால் உலகுக்குத் தீமை விளையும். அவர்கள் மிக்க கேடு புரிகின்றவர் அவார்கள்.

ஆகவே, தேனை உண்ணுகின்ற வண்டு உயர்ந்தது, அதில் அரச வண்டும் உண்டு. “கோத்தும்பீ!” என்பர் மணிவாசகர். அந்த வண்டுக்கு நிகரானது மகளிரது கண்கள்.

உற்ற மது தோடு:-

தோடு-மலர். தேன் துளிக்கின்ற மலர். அம்மலர்போல் விரிந்த கண்கள்.

கணையை:-

கணை உடம்பைப் பிளக்கும் ஆற்றல் படைத்தது. அதுபோல் மகளிரது கண்களும் உயிரைப்பிளக்கும் ஆற்றல் படைத்தவை.