பக்கம் எண் :


752திருப்புகழ் விரிவுரை

கருத்துரை

செந்தில் மேவிய கந்தநாயகனே! மாதர் மயக்கத்தை விட்டு, பக்தி செய்யுமாறு மயிலின் மீதுவந்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும்.

83

   சந்தனச வாதுநிறை கற்பூர
      குங்குமப டீரவிரை கத்தூரி
      தண்புழுக ளாவுகள பச்சீத              வெகுவாச
     சண்பகக லாரவகு ளத்தாம
      வம்புதுகி லாரவயி ரக்கோவை
      தங்கியக டோரதர வித்தார               பரிதான
   மந்தரம தானதன மிக்காசை
      கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
      வஞ்சகவி சாரஇத யப்பூவை          யனையார்கள்
     வந்தியிடு மாயவிர கப்பார்வை
      அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
      வந்தடிமை யாளஇனி எப்போது        நினைவாயே
   இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
      சம்ப்ரமம யூரதுர கக்கார
      என்றுமக லாதஇள மைக்கார            குறமாதின்
     இன்பஅநு போகசர சக்கார
      வந்தஅசு ரேசர்கற கக்கார
      எங்களுமை சேயெனரு மைக்கார        மிகுபாவின்
   செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
      குன்றெறியும் வேலின்வலி மைக்கார
      செஞ்சொலடி யார்களெளி மைக்கார    எழில்மேவும்
     திங்கள்முடி நாதர்சம யக்கார
      மந்த்ரவுப தேசமகி மைக்கார
      செந்தினகர் வாழுமரு மைத்தேவர்      பெருமாளே.