பதவுரை இந்த்ரபுரிகாவல்-தேவந்திரனுடைய நகரமாகிய அமராவதியைக் காத்தருளு கின்ற, முதன்மைக்கார-தலைமையுடையவரே! சம்ப்ரம மயூர-மிகவும் சிறந்த மயிலை, துரகக்கார-குதிரைபோல் வாகனமாகக் கொண்டவரே! என்றும் அகலாத இளமைக்கார-எக்காலத்தும் நீங்காத இளமையுடையவரே! குறமாதின் இன்ப அநுபோக-வள்ளியம்மையாருடைய இன்ப நுகர்ச்சியில், சரசக்கார- திருவிளையாடல் புரிபவரே! வந்த அசுர ஈசர் கலகக்கார-போருக்குவந்த அசுரர்த் தலைவர்களுடன் போர்ப் புரிந்தவரே! எங்கள் உமை சேய் என- எங்களுடைய உமாதேவியின் குழந்தை யென்று கூறப்பெறுகின்ற, அருமைக்கார-அருமை வாய்ந்தவரே! மிகுபாவின்-மிகுந்த இனங்களையுடையப் பாடல்களினால், செந்தமிழ்சொல்-செந்தமிழ்ச் சொல் புலவர்கள் கூறிய, நாலு கவிதைக்கார-நான்கு கவிகளை யுடையவரே! குன்று எறியும் வேலின் வலிமைக்கார-கிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலினுடைய ஆற்றலை யுடையவரே! செஞ்சொல் அடியார்கள் எளிமைக்கார-இனிய சொற்களையுடைய அடியவர்களுக்கு எளிமையானவரே! எழில் மேவும் திங்கள் முடிநாதர்-அழகு மிகுந்த சந்திரனை முடிமேல் புனைந்த சிவமூர்த்தி யினுடைய, சமயக்கார-சைவ சமயத்தை வளர்ப்பவரே! மந்த்ர உபதேச மகிமைக்கார-மந்திரத்தை உபதேசிக்கிற மகிமையை யுடையவரே! செந்தில் நகர் வாழும்-திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள, அருமைத் தேவர்-அருமையான தேவர்கள் போற்றும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! சந்தன-சந்தனம், சவாது-சவ்வாது, நிறை கற்பூர-நிறைந்த பச்சைக் கற்பூரம், குங்குமபடீர-குங்குமப்பூவுடன் சேர்ந்த சந்தனம், விரை கத்தூரி-மணமுள்ள கஸ்தூரி, தண்புழுகு-குளிர்ந்த புனுகுச்சட்டம், அளாவுகளப-இவைகளின் கலவைப் பூசப்பட்டதாய், சீத வெகுவாச சண்பக-குளிர்ந்து மிகுந்த வாசனையை யுடைய சண்பக மலரும், கலார-செங்கழுநீர் மலரும், வகுளத்தாம-மகிழம்பூக்களும் அணிந்துள்ளதாய், வம்பு-கச்சும், துகில்-ஆடையும், ஆர-முத்துமாலையும், வயிர கோவை- வயிரமணி மாலையும், தங்கிய-பொருந்தியுள்ளதாய், கடோர-கடினமும், தர- உயரமும், வித்தார-அகலமும், பரிதான-பருமையும் உடையதாய், மந்தரம் அது ஆனதன-மந்தர மலைபோன்ற கொங்கைகளை யுடையவராய், மிக்காசை கொண்டு பொருள் தேடும்-மிக்க ஆசைக் கொண்டு பணம் தேடுகின்றவராய் அதி நிட்டூர-மிகவும் கொடுமையுடைய, வஞ்சக விசார இதய |