-வஞ்சனைச் செயல்களை ஆராய்கின்ற மனத்தையுடைய, பூவை அனையார்கள்-நாகணவாய்ப் பறவை போன்ற பொது மகளிருடைய, வந்தி இடு- துன்பத்தைத் தருகின்ற, மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும்-மாயமும் காமமும் நிறைந்த பார்வையாகிய அம்பினால் உள்ளம் வாடுகின்ற, அறிவு அற்றேனை-அறிவு அற்றுப் போன அடியேனிடம், வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே-எழுந்தருளி வந்து அடிமையாகக் கொண்டு ஆட்கொள்ள இனி எப்போது தேவரீர் நினைப்பீரோ? பொழிப்புரை இந்திரனது நகரமாகிய அமராவதியைக் காத்தருளும் முதல்வரே! மிக்க பெருமையுடைய மயிலைக் குதிரை வாகனம் போல் செலுத்துபவரே! எந்நாளும் அகலாத இளமையுடையவரே! வள்ளிநாயகியை (ஆன்மாக்களின் பொருட்டு) மணந்து வாழ்பவரே! போருக்குவந்த அசுர வேந்தர்களை யழித்தவரே! எங்கள் உமாதேவியின் புதல்வர் என்னும் அருமையுடையவரே! மிகுந்த பாவினங்களை யுடைய செந்தமிழ் மொழியால் அடியார்கள் பாடும் நான்கு கவிகளை யுடையவரே! கிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலாயுதத்தின் ஆற்றலை யுடையவரே! இனிய சொற்களையுடைய அடியார்களிடம் எளிமைப் பூண்டவரே! அழகிய சந்திரனைச் சூடிய சிவமூர்த்தியின் சமயத்தைப் பரப்புகின்றவரே! திருச்செந்தூரில் வாழுந் தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே! சந்தனம், சவ்வாது நிறைந்த பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ கலந்த சந்தனம், கஸ்தூரி, குளிர்ந்த புனுகு, இவைகள் கலந்த கலவைக் குழம்பு பூசப்பட்டதாய், குளிர்ச்சியும், மிகுந்த மணமும் உடைய சண்பக மலர், செங்கழுநீர் மலர், மகிழ மலர், முதலிய மாலைகளையுடையதாய், இரவிக்கை, ஆடையுடன் கூடியதாய், முத்துமாலை, வைரமாலை பூண்டதாய், கடினமும் உயர்வும் விசாலமும் பருமையும் உடையதாய், மந்தரமலைபோல் உள்ள தனங்களை உடையவராய், மிக்க ஆசைக்கொண்டு பணத்தைத் தேடுகின்ற மிகுந்த கொடியவர்களாய், வஞ்சனையான ஆராய்ச்சியுடைய |