“நாளுமினியகனி எங்களம்பிகை” -(ஓலமறை) திருப்புகழ். “அமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்பயந்திடும் புதல்வோனே” -(ஒருவரையும்) திருப்புகழ். மிகுபாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார:- தமிழில் பாவினங்கள் நான்கு; வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா, ஆசிரியப்பா என்பன. இனி வெண்பாவில் நேரிசை வெண்பா, சிந்தியல் வெண்பா ஒருவிகற்ப வெண்பா, இருவிகற்ப வெண்பா, குறள் வெண்பா, இப்படிப் பல உட்பிரிவுகள் உண்டு. இவ்வாறே வஞ்சிப்பாவிலும், கலிப்பாவிலும், ஆசிரியப்பாவிலும் பல பேதங்கள் இருக்கின்றன. இவற்றின் விபரங்களை யாப்பிலக்கணத்தில் அறிக. இனி நாலு கவிகள்; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்பவை; ஆசுகவி விரைந்து உடனுக்குடன் பாடுவது. மதுரகவி இனிமையாகப் பாடுவது. சித்ரகவி ஏகபாதம், நாகபந்தம், தேர்ப்பந்தம், மயூரபந்தம், கோமூர்த்தி முதலியவை. வித்தாரகவி, பலவித சாங்கோபாங்கமாகப் பாடுவது. இந்த நாலு கவிகளையும் பாடும் திறத்தைத் தன்னை வழிபட்ட அடியவர்கட்கு அள்ளித்தரும் வள்ளல் முருகன். “நாகாசல வேலவ நாலு கவி த்யாகா சுரலோக சிகாமணியே” -அநுபூதி (11) இந்த நாற்கவிகளிலும் வல்லவர் நம் அருணகிரிநாதர். இதனை அவரே சீர்பாத வகுப்பில் கூறுகின்றார். “முடியவழி வழியடிமை யெனுமுரிமை அடிமைமுழு துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுள பரிமள நிகுல கவிமாலை சூடுவதும்” குன்றெறியும் வேலின் வலிமைக்கார:- தாரகனுக்குத் தோழனும், மாயத்தில் வல்லவனுமாகிய கொடிய அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் வருத்துவதே தொழிலாக உடையவன். பரம சாதுவாகிய பறவை அன்றில். அதற்கு கிரவுஞ்சம் என்று மற்றொரு பேரும் உண்டு. அந்த கிரவுஞ்சப் பறவை உருவில் |