496திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     முத்தி அங்கு உதித்தோர் எய்தும் பதி - திருவாரூர்; இது பிறக்க
முத்திதரும் தலமென்பது மெய்ந்நூற் கொள்கை. இப்பதி விராட் புருடனுக்கு
மூலாதாரத் தானமாகவும், பிருதிவிலிங்கத் தலமாகவும் உள்ளது; இலக்குமி
பூசித்தமையாற் கமலை யென்னும் பெயரு முடையது; மனுநீதிச் சோழர்
உயிர்துறந்த ஆன்கன்றின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலூர்ந்து
முறைசெய்து திருவருள் பெற்றது; முசுகுந்தச் சக்கரவர்த்தி திருமால்
முதலானோரால் பூசிக்கப்பெற்ற ஆன்மார்த்த மூர்த்தியாகிய தியாகேசரை
இந்திரன்பாற் பெற்றுக் கொணர்ந்து பிரதிடடிப்பித்தது; நம்பியாரூரர்
சிவபெருமானால் அழைக்கப்பெற்றுச் சென்று பரவையாரை மணந்து தம்பி
ரான்றோழர் என்னும் பெயரும் பெற்று இன்புற் றிருந்தது; அவரால் திருத்
தொண்டர்கள் வரலாற்றுக் கெல்லாம் மூலமாகிய திருத்தொண்டத் தொகை
அருளப் பெற்றது; மற்றும் எண்ணிறந்த சிறப்புக்களுடையது. இது மூவர்
தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி.

     முதல் நூல் நான்கும் - நான்கு வேதங்களும், ஏத்தும் பதி -
திருமறைக்காடு; வேதாரணியம். இது வேதங்கள் பூசித்துத் திருக்காப்பிட்ட
திருக்கதவினைத் திருநாவுக்கரசர் பதிகம் பாடித் திறந்தும், திருஞான
சம்பந்தர் பதிகம் பாடி அடைத்தும் தமிழ் வேதமெய்ம்மை தெரித்தருளப்
பெற்றது; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (17)

பிரமன்மான் முதலாந் தேவர் பிரளயத் திறவா வண்ணம்
பரமனார் தோணி யேற்றும் பன்னிரு நாமம் பெற்ற
புரமிது சடாயு சம்பா திகள்பெரும் பூசை செய்ய
வரமளித் திருணோய் தீர்க்கு மருந்துறை பதியீ தாகும்.

     (இ - ள்.) பிரமன் மால் முதலாம் தேவர் - பிரமனுந் திருமாலு
முதலிய தேவர்கள், பிரளயத்து இறவாவண்ணம் பரமனார் தோணி ஏற்றும் -
பிரளய காலத்தில் இறந்து போகாவாறு இறைவனார் தோணியின்கண்
ஏற்றப்பெறும், பன்னிருநாமம் பெற்ற புரம் இது - பன்னிரண்டு
திருப்பெயர்களைப் பெற்ற நகரமாகிய சீகாழிப்பதி இது; சடாயு சம்பாதிகள்
பெரும்பூசை செய்ய - சடாயுவும் சம்பாதியும் பெரிய வழி பாடியற்ற. வரம்
அளித்து இருள் நோய் தீர்க்கும் மருந்துஉறை பதி ஈது ஆகும் - அவர்
கட்கு வேண்டிய வரங்கொடுத்து ஆணவ இருளொடு கூடிய பிறவிநோயைத்
தீர்க்கும் மருந்து உறையும் புள்ளிருக்கு வேளூராகிய பதி இதுவேயாகும்.

     தோணி யேற்றும் புரம். பன்னிரு நாமம் பெற்ற புரம் எனத் தனித்தனி
கூட்டுக. பன்னிரு நாமம் இவை யென்பதனை,

ழுபிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவிறிருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.ழு

என்னும் பெரியபுராணச் செய்யுளா லறிக. இப் பன்னிரு பெயரினையும்
திருஞான சம்பந்தப் பெருமான் பல பதிகத்தும் பாராட்டுதலுங் காண்க;
பிரமன் பூசித்தமையாற் பிரமபுரம்; சூரபன்மன் போருக்குடைந்த இந்திரன்
பூசித்த காலை இறைவன் வேணுவாய் முளைத்து அருள் செய்தமையின்
வேணுபுரம்; சூரபன்மனால் துன்புற்ற வானோர்கள் பிரமேசரைப் புகலடைந்து
வழிபட்டமையாற் புகலி; அசுர குருவாகிய சுக்கிரன் பூசித்தமையால்