துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப் பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே சீமுல மாச்சுதடி. | 111 |
| | |
நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே இலங்குகின்ற திங்களடி. | 112 |
| | |
கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே வையகனாய் வந்தாண்டி. | 113 |
| | |
மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச் செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே ஆனந்த மானதடி. | 114 |
| | |
உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப் பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே மருவுகின்ற ருத்ரனடி. | 115 |
| | |
வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப் பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில் மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே வையத் துதித்தாண்டி. | 116 |