வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல் பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம். | 142 |
| | |
பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல் பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம். | 143 |
| | |
நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய் ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம். | 144 |
| | |
பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக் காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம். | 145 |
| | |
பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். | 146 |
| | |
காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். | 147 |
| | |
உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம். | 148 |
| | |
வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். | 149 |
| | |
பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல் விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம். | 150 |
| | |
அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய் கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம். | 151 |
| | |
ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். | 152 |
| | |
பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். | 153 |
| | |
ஆசார நேய அனுட்டானமும் மறந்து பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம். | 154 |
| | |
பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம். | 155 |