பெரியோரின் பெருமை கெடாது
[இப் பாடலை
திரு.கு. அழகிரிசாமி அவர்கள் 15-9-68 கல்கி இதழில் ‘பாரதி புதையல்’ என வெளியிட்டு,
ஓர் ரசமான குறிப்பும் எழுதியிருந்தார். அக் குறிப்பு வருமாறு: “திரிசிரபுரம் எச்.ஜி.
ராமாநுஜலு நாயுடு ஆசிரியராக இருந்த “ஆநந்த குணபோதினி” என்ற மாதப் பத்திரிகையின்
முதலாவது இதழில் (ஏப்ரல், 1926) கீழ்க்காணும் பாரதி பாட்டு, இதே தலைப்புடனும்
இதே அடி குறிப்புக்களுடனும் வெளியாகி இருக்கின்றது. இந்தப் பாட்டு இதுவரையிலுமே வெளிவந்துள்ள
பாரதி பாடல் தொகுதி எதிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்
பாட்டின் அடியில் “ஸ்ரீ பாரதி” என்றே குறிப்பிட்டிருப்பது மகாகவி சுப்பிரமணிய
பாரதியாரையே. இதே பத்திரிகையின் 1926 ஆகஸ்டு இதழில் பிரசுரமாகியுள்ள “பாரத
பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந் நினை வகற்றாதீர்” என்ற பாரதி பாடல்
வரிகளின் கீழேயும் “ஸ்ரீ பாரதி” என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.”]
21.
(2) ஆதாரம்: ‘கல்கி’ 13-4-1958
22. ஆதாரம்: ‘கல்கி’ 15-9-68
இதழ்
|