பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு461

Untitled Document


     “தொண்டன் மாத இதழ் சித்திரை 1951.

     நாகர்கோவில் சரஸ்வதி   மண்டபத்தில் 29-3-1951 அன்று தஞ்சை
ஸ்ரீதேவி நாடக சபையார்     நடத்திய பராசக்தி நாடகத்தைப் பார்த்துப்
பாராட்டிய பாடல். இத்துடன்   உரைநடைக் குறிப்பும் உண்டு. அது கீழ்
வருமாறு : -

     மக்களின் அறிவை வளர்ப்பதற்கு நாடகம் ஒரு சிறந்த கருவியாகும்
என்பதில் யாதும் ஐயமில்லை.        அதனாலேயே நாடகசாலை பாமர
மக்களின் பல்கலைக் கழகம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் சரோஜினி தேவி
கூறியிருக்கிறார். உண்மை      இவ்வாறு இருப்பினும், முழுப்பயனையும்
பெறவேண்டுமானால்      நல்ல நாடகங்கள், நல்ல முறையில் நடைபெற
வேண்டும். நாடகத்துக்கு உயிரூட்டுவது நடிகரேயாவர்.

     நாடகத்தமிழ் நாடகத்தமிழ்     என்று நாம் பெருமையாகப் பேசிக்
கொள்ளுகிறோமே     தவிர பிறமொழியில் இருக்கிற அளவு நம் தமிழ்
மொழியில்   நல்ல நாடகங்களைக் காண்பது மிக அருமை. தற்காலத்தில்
சில அறிஞர்கள்          இக்குறையை நீக்குவதற்கு முன் வந்திருப்பது
பாராட்டுக்குரியது.

     நமக்கு இன்று தேவையானவை சமூக சீர்த்திருத்த நாடகங்களாகும்.
இத்துறையில்  தஞ்சை ஸ்ரீதேவி நாடக சபையார் நல்ல தொண்டு செய்து
வருகிறார்கள். 20-3-1951   அன்று நாகர்கோவில் ஒழுகினசேரி சரஸ்வதி
மண்டபத்திலே  மேற்படி சபையாரின் பராசக்தி நாடகத்தைப் பார்த்தேன்.
போகும் பொழுதே உடல்நிலை காரணமாக ஒருமணி நேரமேஇருப்பதாகத்
தீர்மானித்துக் கொண்டு போனேன். ஆனால் நாடகம் தொடங்கிமுடிவுற்ற
மூன்றுமணி நேரமும்     ஒரே இருப்பாய் இருந்துவிட்டேன். அவ்வளவு
கவர்ச்சிகரமாக இருந்தன நடிப்பு, இசை, அரங்கமைப்பு முதலியன.

     கலைஞர்கள்  ஒவ்வொருவரும் அவரவர்கள் பகுதிகளை உணர்ச்சி
ததும்ப நடித்து    நாடகப் பாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள் என்றால்
அது மிகையாகாது. காட்சி மாற்றங்களினாலோ வேறு காரணங்களினாலோ
ரசிகர்களுக்கு ஒருவித       சலிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிட
வேண்டிய விஷயம்.

     இம்முறையில்      நாடக சபையை நடத்தி வரும் திருஇரத்தினம்
அவர்களின் அரிய உழைப்புக்குத் தமிழகம் என்றும் கடப்பாடுடையதாம்.

1066 - 1070 தேரூர் நூல் நிலைய வாழ்த்து

     கவிமணி   பிறந்த ஊராகிய தேரூரில் ஊர் மக்களின் முயற்சியால்
6-6-1952 அன்று “கவிமணி தேசிய விநாகம் பிள்ளை நினைவு