இனி, செய்யுளியற்றுந் திறத்தை நோக்கினும்,
பாரதிதாசனுக்குப் பின் பெருஞ்சித்திரனும்
முடியரசனுமே சிறந்தவராவர் என்பதை நடுநிலைத்
திறனாய்வாளர் அறிவர்.
இனி, கருத்துவேறுபாட்டிற் கிடமான ஒரு பொருள்பற்றி
ஒரு கூட்டத்தில் இறுதியிற் பேசுபவர் கூற்றே
வலிமையுள்ளதெனப் புல்லறி வாளராற்
கொள்ளப்படுகின்றது. சொற்பொழிவாளருள்
இறுதியிற் பேசு வார்க்கு ஏனையோர்க் கில்லாத
வாய்ப்புண்டு. ஆயின், அவைத் தலைவர்க்கோ
முன்னும் பின்னும் இடையும் பன்முறை பேசி எவ்வெவர்
கூற்றையும் மறுத்துரைக்கப் போதிய
வாய்ப்புள்ளது. ஆயினும், அறிஞர் ஓர் உரையின்
உறுதியை உண்மை பற்றியேயன்றி இறுதி நிகழ்ச்சிபற்றி
ஒப்புக்கொள்ளார். ஓர் அறமன்றத்தில் தீர்ப்பாளர்
கூற்றே இறுதியாயினும், வட்டமன்றத் தீர்ப்பு
மாவட்டமன்றத் தீர்ப்பாலும், மாவட்ட மன்றத்
தீர்ப்பு மாநில மன்றத் தீர்ப்பாலும், மாநிலமன்றத்
தீர்ப்பு நடுவண் மன்றத் தீர்ப்பாலும் தள்ளப்படுதல்
காண்க.
எத்தகைச் செய்தியாயினும், ஒருவர் இன்னொருவரை
உண்மை யாகப் பாராட்டுதற்கு நடுநிலை இன்றியமையாததாகும்.
அந் நடு நிலையோ தன்னலமும் பொறாமையு
முள்ளவிடத் தமைவது குதிரைக் கொம்பே. ஒருவன்
தன் மகளுக்கு மணமகனைத் தேடுமாறு அல்லது திட்டஞ்
செய்யுமாறு மணப்பருவ மகளுள்ள இன்னொருவனை அனுப்பு
தல் கூடாது. அனுப்பின், அனுப்பப்பட்டவன் தன்
மகளை உயர்த்தியும் தன்னை அனுப்பினவன்
மகளைத் தாழ்த்தியுமே பேசுவான். அங்ஙனமே
ஒருவர் ஒரு நூற்கு வரைந்த உரையைப் பாராட்டற்கும்,
அந் நூற்கே உரைவரைந்த பிறரை அமர்த்துதல்
கூடாது. அமர்த்தின் ஏதேனும் ஒரு குற்றம் அல்லது
குறை கூறத்தான் முயல்வர். அண்மை யிற் பறம்புக்குடியில்
நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக முதலாட்டை
விழாவில் இத்தகைய செய்தியே நிகழ்ந்தது.
மறைமலையடிகள் இல்லாத காலத்தில் என் "
திருக்குறள்
தமிழ் மரபுரை "
யை ஒருவரும் பாராட்டத் தேவையில்லை. உண்மைத்
தமிழர் அனைவரும் விலைக்கு வாங்கும் முறையிலேயே
அஃது எழுதப்பட்டுள்ளது. அதைப் பிறர் பழித்தாலும்
விற்பனை குன்றாது; பாராட்டினால் விற்பனை
கூடிவிடாது. அஃது என் அரைநூற்றாண்டுக் கல்வியாராய்ச்சியின்
பயனாக மொழிநூல், வரலாறு, மாந்தனூல் என்னும்
முத்துறை நூலறிவு கொண்டு நடுநிலையாக இறைவனன்றி
வேறெவர்க்கும் அஞ்சாது எழுதப்பெற்றது. பரிமேலழகரு
ரையினும் விரிவாகவும் விளக்கமாகவும் உள்ளது. சிறப்பாகப் பழைய
உரைகளின் ஆரிய நஞ்சை
அறவே நீக்கித் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும்
போற்றிக் காப்பது. அவ் வுரையைப் பாராட்டத்
தாமரைத்திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்களையே
குறித்திருந்தேன். அவர்கள் உடல்நலக் குறைவால்
வரவியலாதுபோயிற்று. ஏனை மூவரை விழாக்
குழுவாரே அமர்த்தினர். அஃது என் குற்றமன்று.
அம் |