பக்கம் எண் :

62பாவாணர் நோக்கில் பெருமக்கள

"உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார்
எப்பா வலரினு மில்"

என்று முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பெயரிலும்,

"அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து - பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்"

என்று தொடித்தலை விழுத்தண்டினார் பெயரிலும்,

"எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை"

என்று மதுரைத் தமிழ்நாகனார் பெயரிலும்,

"அறமுதல் நான்கும் அகலிடத்தோ ரெல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார்ர் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி"

என்று கோவூர்கிழார் பெயரிலும்,

"இம்மை மறுமை யிரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியில் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினரின்குறள்வெண் பா"

என்று இழிகட் பெருங்கண்ணனார் பெயரிலும்,

"உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு"

என்று குலபதி நாயனார் பெயரிலும்,

"பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து"

என்று தேனீக்குடிக் கீரனார் பெயரிலும்,