பக்கம் எண் :

40வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      இனத்தாரின் கூட்டுவேலை என்னும் பேருண்மை நிலைத்து நிற்கின்றது. கூடியபடி, கோல் மாந்தரின் முன்னோரான நிடாதர் அல்லது ஆத்திரியரே இக் கூட்டினத்தின் முதற்கூறாவர். அவருக்கு முந்தினவரும் இந்திய நிலத்தி னின்று நீங்கிவிட்டவராகத் தோன்றுகின்றவருமான நீகரோப்போலியரை நாம் கவனியாது விட்டுவிடலாம். ஆத்திரியருக்குப் பின் வந்தவர் திரவிட மொழியாளர். அவர் முதற்கண் கிரேக்க நாட்டிலும் அதனையடுத்த தீவுகளிலும் மேலைச் சின்ன ஆசியாவிலும் எல்லெனிய முன்னை ஈசிய (Aegean) நாகரிகத்தை அமைத் தவரோடு தொடர்புடைய நண்ணிலக் கடற்கரை வாணராயிருந்ததாகச் சிலர் நம்புகின்றனர். அதுவே என் கருத்தும். பக். 19
இவற்றின் மறுப்பு
      தமிழ்ப் பகைவரான பிராமணத் தமிழ்ப் புலவரும் வரலாற்றாசிரியரும், தமிழையும் தமிழிலக்கண விலக்கியத்தையும் பற்றித் தமிழிலும் ஆங்கிலத் திலும் தம் மனம்போனவாறு தப்புந்தவறுமாக எழுதியுள்ளனர்.
      பிறமொழிகட்கில்லாது தமிழுக்குள்ள தனிச்சிறப்புகளுள் தலை மையானது பொருளிலக்கணம். இதைப் பார்த்துப் புழுங்கிய ஆரியத் தமிழ்ப் புலவர், தம்மா லியன்றவரை அதன் பெருமையை அயல்நாட்டார் அறியாதவாறு மறைத்தும் குறைத்தும் ஆங்கிலத்தில் வரைந்து வந்திருக் கின்றனர். ஒருவர் பொருளதிகாரம் என்பது பாட்டியலே (Poetics) என்று முற்றும் மறைத்துவிட்டார். பிறர் அது பழங்காலப் போருங் காதலுமே கூறுவதென்று குன்றக் கூறிவிட்டனர்.
      பர். சட்டர்சியார் தமிழைப் பிராமணர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் வாயிலாகக் கற்றுப் பிறழவுணர்ந்தவர்.
  " பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்பழு (1091)
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள ஐயர் என்னும் சொற்கு, ஆரிய மேலோர் என்று பொருள்வரைந்தார் மு. இராகவையங்கார். அதையே மெய்யுரையாகக் கொண்டு, பேரா. கே. (K.) நீலகண்ட சாத்திரியார் தம் 'தென்னிந்திய வரலாறு' (A History of South India) என்னும் நுலில், ஆரியர் வருமுன் தமிழர் நிலையான இல்லற வாழ்க்கையின்றி விலங்குகள் போல் அவ்வப்போது கூடித் திரிந்தனர் என்று வரைந்துள்ளார்.