பக்கம் எண் :

மொழிநூல்41

      இம் முறையிலேயே பர். சட்டர்சியாரும் தொல்காப்பியத்திற் கூறப்பட் டுள்ள தமிழர் களவுமணத்தை, முந்தியல் மாந்தரின் ஒழுங்கற்ற தாராளக் கூட்டமாகக் கருதிவிட்டார். கிழவரும் வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தருமான ஐவகைத் தலைவர் அல்லது அரசரே. தம் இளமையில் வேட்டையாடச் சென்றவிடத்து, எல்லா வகையிலும் தம்மையொத்த அல்லது சற்றே தாழ்ந்த, அரமகளிர் போலும் அழகிற் சிறந்த கன்னிகை யரைத் தற்செயலாகக் கண்டு, இயற்கையாக எழுந்த இருதலைக் காதலாற் கூடுவதும் பின்பு இல்லறமாக இறுதிவரை நீடுவதுமான, தெய்வத் திரு மணத்தையே, தொல்காப்பியமும் அதற்கு முந்து நூல்களுமான தமி ழிலக்கண நூல்கள், இருவர் பெற்றோர்க்கும் தோழனுந் தோழியுமொழிந்த மற்றோர்க்கும் தெரியாது மறைவாய் நிகழ்தல்பற்றிக் களவு எனக் கூறுகின்றன என்பதை, அவர் இன்னும் அறிந்திலர்.
அனவரத விநாயகம் பிள்ளையார் தமிழைச் செவ்வையாய் அறிந்த வரல்லர். அவர் இல்வாழ்க்கையும் ஆரியச்சூழலில் தென்சொற்கட்குப் பிரா கிருத மூலமும் சமற்கிருத மூலமும் அவர் காட்டியிருப்பது வியப்பன்று. அக்காலத்தில் இத்தகைய காட்டிக்கொடுப்பின்றிச் சென்னைப் பல்கலைக் கழத்திற் பணியாற்றுவதும் அரிது.
      அந்தி, அவை, ஆயிரம், உலகு, கண்ணகி, தி (பெண்பாலீறு), துழாய், தூணம், தேயம், தோணி, நேயம், பார்ப்பான் என்பவை தூய தென்சொற்களே.
      அயன், ஆவணி, காப்பியம், தருமம், ராடம் என்பனவே வட மொழித் திரிசொற்கள்.
      கோவலன் (கோபாலன்) என்பது தென்சொல்லும் வடசொல்லுங் கலந்த இருபிறப்பி (hybrid).
      சென்றவிடத்து, எல்லா வகையிலும் தம்மையொத்த அல்லது
அந்துதல் = கலத்தல். பகலும் இரவும் அல்லது இரவும் பகலும் கலக்கும் வேளையே அந்தி .
  "காலை யந்தியும் மாலை யந்தியும்ழு (புறம்.34)
      அந்தி என்பது பிற்காலத்திற் சகரமெய் முன்னேற்றுச் சந்தி என்றா யிற்று. ஒ.நோ: அமை - சமை.
      சந்தி = காலை, மாலை, பலதெருக் கூடுமிடம்.