பக்கம் எண் :

மொழியதிகாரம்145

சாணம் - சகண (bh, g)

     சண்ணுதல் = நீக்குதல். "கீழாநெல்லி......காமாலைகளைச் சண்ணும்"
(பதார்த்த.300).

     சண் - (சாண்) - சாணம், சாணி = மாட்டுப் பவ்வீ.

     வடவர் பல்வேறு மலத்தையும் சாணியையும் குறிக்கும் சக்ருத்
என்னும் சொல்லினின்று சக்ன் என்றொரு மூலத்தை வலிந்து திரிப்பர்.

சாணை - சாண, சான

     சவள் - சாள். சாளுதல் = வளைதல். சாள் - சாய். சாய்தல் = வளைதல்.

     சாள் - சாளை = வட்டமான குடிசை. சாளை - சாணை= 1. வட்டமான
சாணைக்கல். ம. சாணக்கல்லு, க., து. சாணெக் கல்லு. 2. வட்டமான
புளியடை. 3. வட்டமான பணியாரவகை. 4. வட்டமான கதிர்ச் சூடு.

     வடவர் சோ (தீட்டு) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர்.
அது சாணைக்கல் ஒன்றற்குத்தான் சிறிது பொருந்தும்.

சாத்து - ஸார்த்த

     சார்-சார்த்து - சாத்து = 1. கூட்டம்.

"சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்"
(கல்லா. 63 : 32)

     2. வணிகர்கூட்டம்.

"சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்"
(சிலப்.11:190)

சாத்தன்-சாஸ்தா

     சாத்து - சாத்தன் = வணிகச் சாத்தினர் வணங்குந் தெய்வம்.

     பெருஞ்சாலை வழிகளிற் சாத்தன் (ஐயனார்) கோவி லிருப்பதையும்,
அங்குப் பொதிசுமத்தற்கேற்ற குதிரைகள் போன்ற உருவங்கள் செய்து
வைத்திருப்பதையும் நோக்குக.

     பண்டைக்காலத்திற் பெரும்பாலும் வணிகரே சாத்தன் என்னும்
பெயர் தாங்கியிருந்தனர்.

     எ-டு : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

சாந்து - சந்தன (c)

     சார்-சார்த்து-சாத்து. சாத்துதல் = 1. பூசுதல் (பிங்.). 2.
     திருமண் காப்பிடுதல்.