நாழி-நாடி
நுள்-நள்-நாள்-நாழி=உட்டுளைப் பொருள், மூங்கிற்படி, முகவைப்படி.
நெசவுக்குழல், அம்பறாத்தூணி, கன்னல் (நாழிகை வட்டில்), நாழிகை. ம.
நாழி, க. நாழி.
நாழிக்கிணறு,
நாழிச்செம்பு, நாழிமணி, நாழியோடு, நாழிவழி என்பன
தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள்.
நாழிகை-நாடிகா
நாழி-நாழிகை
= 1. உட்டுளைப் பொருள்.
2
. நாழிகை வட்டில்.
3.
நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுதும்
ஒரு முறை விழும் நேரம் = 24 நிமையம் (நிமிஷம்).
4. அறை.
உண்ணாழிகை
= உள்ளறை (கர்ப்பக்கிருகம்).
"உண்ணாழிகையா
ருமையாளோடு" (தேவா. 592: 3).
உண்ணாழிகை
வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழு (I.M.P.Cg.205).
திருவுண்ணாழி-திருவுண்ணாழிகை
(கர்ப்பக்கிருகம்).
"திருவுண்ணாழிகை
யுடையார் வசமே நாள்தோறும் அளக்கக்
கடவோம்" (S. I. I.I, 143).
ம.
நாழிக, க. நாழிகே.
நாழிகைக்
கணக்கன் (சிலப். 5: 46, உரை), நாழிகைக்கல்
(Mile-stone), நாழிகைத் தூம்பு (நீர்வீசுங் கருவி வகை, பெருங்.
உஞ்சைக். 38: 106), நாழிகைப் பறை (சிலப். 3: 27, உரை), நாழிகை
வட்டம் (கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் முறை),
நாழிகை வட்டில் (சிலப். 5: 49, உரை), நாழிகை வழி என்பன தொன்று
தொட்ட பெருவழக்குச் சொற்கள்.
நிமை-நிமி
இமை
= இமைத்தல், கண்ணிமை.
ம.
இம, க., து. இமெ.
இமை-நிமை
= இமைத்தல், கண்ணிமை. க. எவே.
"நீலிக்குக்
கண்ணீர் நிமையிலே" (பழமொழி).
வடவர்
நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி)
பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன்
உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக்
கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர் (விஷ்ணு புராணம், 4: 5).
|