|
"கொடிச்சி
காக்கும் பெருங்குர லேனல்" (ஐங். 296).
வளையம்-வலய
வள்-வளை-வளையம்
= வட்டம், வளையல்.
வனம்-வனஸ்-
(இ.வே.)
வனம்
= அழகு. "வனமுலை’’ (கலித். 97).
வனப்பு
= அழகு. "செவ்வானத்து வனப்பு’’ (புறம். 4).
வாடகை-பாடக் (bh,
)
வாழ்-(வாழகை)-வாடகை
= வீட்டிற் குடியிருத்தற்குக் கட்டும் மாத
அல்லது ஆட்டைக் கட்டணம்.
பின்பு
இயங்குதிணைப் பொருள்களைப் பயன்படுத்தற்குக்
கொடுக்குங் கட்டணமும் இப் பெயர்பெற்றது.
வடவர்
பட் (bha) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டி,
அதையும் ப்ருத்த(bhta)
என்பதன் திரிபாக்குவர். bh= பொறு. bhta=தாங்கப்பெற்றவன்,
கூலிக்கு அமர்த்தப்பெற்ற வேலைக்காரன்
அல்லது உழைப்பாளி அல்லது படைஞன். இவ்வகையிலும் மூலம்
தமிழ்ச்சொல்லே. பொறு-bh.
வாடி-வாடீ ()
வாடுதல்
= வளைதல், பயிர் பச்சை வளைந்து பட்டுப்போதல்.
வாட்டம்
= வளைவு, பொலிவழிவு.
அங்கணம்
வாட்டசாட்டமாயிருந்தால் தண்ணீர் சரட் டென்று
போகும் என்னும் வழக்கை நோக்குக.
வாடு-வாடி
= வளைசல், அடைப்பு, சூழ வேலி கோலிய விறகு
கடை அல்லது மரக்கடை.
வாரி-வாரி
(இ.வே.)
வார்தல்
= ஒழுகுதல்.
|
"வார்தல்
போகல் ஒழுகல் மூன்றும்நேர்பும்
நெடுமையுஞ் செய்யும் பொருள"
|
(தொல். 800)
|
வார்-வாரி
= நீர், வெள்ளம், கடல், நீர்நிலை. வார் = நீர்.
"வாராயிர
முகமா நுகர்மஞ்சு" (பாரத அருச்சுனன்றவ. 159).
வாரணம்-வாருண,
வருண
வரிதல்
= வளைதல். வரி-வார்-வாரணம் = நிலத்தைச் சூழ்ந்துள்ள
கடல்."வாரணஞ் சூழ்புவி" (தனிப்பாடல்). வாரணம்-
|