மணிக்குன்றப்பெருமாள் கோவில்
திருத்தஞ்சை மாமணிக்கோவில்

எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்
    எனக்கர சென்னுடை வானாள்
அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி
    அவருயிர் செகுந்தவெம் மண்ணல்
வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை
    மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
    நாராயணா வென்னும் நாமம்
         (953) பெரியதிருமொழி 1-1-6

வம்புலாஞ் சோலை மாமதில் சூழ், தஞ்சை மாமணிக் கோயிலில்
உள்ள எம்பிரான் தான் எனக்குத் தந்தை, அவனே என்னுடைய சுற்றம்,
எனக்கு அரசு, என்னுடைய வாழ்நாளும் அவன்தான் அரக்க குலத்தை
அம்பால் அறுத்துக் குவித்த என் அண்ணலாகிய எம்பிரானின்
நாமமாகிய நாராயணா என்னும் நாமமே நான் கடைத்தேறக்
கண்டுகொண்ட நாமம் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட
இத்தலம். தஞ்சை     நகரைத்     தாண்டியதும் அமைந்துள்ள
வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.

பின்