பாண்டவநூதப்பெருமாள் கோவில் - திருப்பாடகம்

நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து
    அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
    நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே - (815)
            - திருச்சந்தவிருத்தம் - 64

பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில் இருந்த
திருக்கோலம் திருப்பாடகத்தில், கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே
எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும்.
எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய
காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த
மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு
அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன்.

அமர்ந்திருந்து கிடந்த மூன்று திருக்கோலங்களும் என்
நெஞ்சைவிட்டு     நீங்காதவைகள்.     எனவே     இத்திருக்கோல
எம்பெருமான்களை விட்டு எனது நினைவு அகலாது. இந்த எண்ணமான
ஞானம் வருவதற்கு முன்பு பிறந்தும் நான் பிறவாதவனாக இருந்தேன்.

இந்த ஞானம் பிறந்த பின் (ஞானத்திலே ஆத்ம சொரூபம் கண்டு
தன்நிலை இழந்து எம்பெருமான் கைங்கர்யமே பிரதானமானது போல)
நான் மறந்திலேன் என்பதும் ஓர் பொருள்.

இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான்
மண்டபத்தில் உள்ளது.

பாடு - மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம்
ஆனதாகக் கூறுவர்.

பின்