தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சான்றிதழ்க்கல்வி

சான்றிதழ்க் கல்வி ஒரு தொடக்க நிலைக் கல்வி. இத்திட்டத்தின் கீழ் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் மொழிப் பாடத்திறன்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்ற மூன்று நிலைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மழலைப்பாடல்கள், அறநெறிக்கதைகள் போன்றவையும் இடம்பெறுகின்றன. பாடங்கள் அனைத்தும் பல்லூடக (Multimedia) வசதிகளைப் பயன்படுத்தி, அச்சு, ஒலி, ஒளி வடிவங்களில் மிகவும் ஆர்வம் ஊட்டும் வகையில் எளிய இனிய முறையில், வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்றவற்றைத் தாமே சோதித்து, கற்றல் நிலை அறிந்து கொள்ள பாடங்களில் பயிற்சிகள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-06-2017 10:50:06(இந்திய நேரம்)