தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சான்றிதழ்க் கல்வியின் விதிமுறைகள்

சான்றிதழ்க் கல்வி

சான்றிதழ்க் கல்வி

சான்றிதழ்க் கல்வி தமிழ் நாடு அரசின் கல்வித் திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்க் கல்வித் திறனை வழங்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இது சான்றிதழ், மேற்சான்றிதழ் ஆகிய நிலைகளில் கீழ்க்காணுமாறு வழங்கப்படுகின்றது.

I. சான்றிதழ் (1 முதல் 6 ஆம் வகுப்பு வரை)

சான்றிதழ்க் கல்வி கீழ்க்காணும் மூன்று நிலைகளை உடையது.

  • அடிப்படை நிலை (வகுப்புகள் 1&2)
  • இடை நிலை (வகுப்புகள் 3&4)
  • மேல் நிலை (வகுப்புகள் 5&6)

II. மேற்சான்றிதழ் (7 முதல் 12 ஆம் வகுப்பு வரை)

மேற்சான்றிதழ்க் கல்வி கீழ்க்காணும் மூன்று நிலைகளை உடையது.

  • மேற்சான்றிதழ் நிலை 1 (வகுப்புகள் 7 & 8)
  • மேற்சான்றிதழ் நிலை 2 (வகுப்புகள் 9 & 10)
  • மேற்சான்றிதழ் நிலை 3 (வகுப்புகள் 11 & 12)

1. சேர்க்கைத் தகுதி

  • சான்றிதழ்ப் படிப்பில் சேருவதற்கு முன்தகுதி தேவை இல்லை, ஆனால் குறைந்தபட்ச வயது வரம்பு பின்வருமாறு:

    வ.எண்

    பாடத்திட்டம்
    குறைந்தபட்ச வயது வரம்பு
    சான்றிதழ்க் கல்வி
    1 .
     அடிப்படை நிலை
    5 வயது
    2 .
     இடைநிலை
    7 வயது
    3 .
     மேல்நிலை
    9 வயது
     மேற்சான்றிதழ்க் கல்வி
    1 .
      நிலை 1
    11 வயது
    2 .
      நிலை 2
    13 வயது
    3 .
      நிலை 3
    15 வயது
  • மாணவர் அவரவர் தகுதி நிலைக்கேற்பச் சான்றிதழ் மற்றும் மேற்சான்றிதழ்க் கல்வியின் எந்த நிலையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.

2. சான்றிதழ்க் கல்வியின் கால அளவு

  • சான்றிதழ் மற்றும் மேற்சான்றிதழ் நிலை ஒவ்வொன்றையும் இரு பருவங்களில் (ஓர் ஆண்டில்) முடிக்கின்றவகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • ஆயினும் மாணவர்கள் அவரவர் திறமைக்கேற்பப் பாடங்களில் சேர்ந்தபின் ஓர் ஆண்டுக்குப் பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

3. பாடத் திட்டமும் மதிப்பீட்டு முறையும்

சான்றிதழ்க் கல்விக்கான பாடத் திட்டமும் மதிப்பீட்டு முறையும் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன :

I. சான்றிதழ் (1-6 வகுப்புகள்)

மதிப்பீட்டு முறை

தாள் குறியீடு

நிலைகள்

படிக்க வேண்டிய கால அளவு (திங்கள்)

வாய் மொழித் தேர்வு (மதிப் பெண்கள் )

காட்சித் தேர்வு (மதிப் பெண்கள்)

இணைய வழித்தேர்வு (மதிப் பெண்கள் )

எழுத்துத் தேர்வு(மதிப் பெண்கள் )

மொத்த மதிப்பு

மதிப்பு விழுக்காடு

BB00

அடிப்படை நிலை

12
50
50
-
100
200
100%
BM00

இடைநிலை

12
-
-
50
75
125
100%
BA00

மேல்நிலை

12
-
-
50
50
100
100%

II.மேற்சான்றிதழ் (7-12 வகுப்புகள்)

மதிப்பீட்டு முறை

தாள் குறியீடு

நிலைகள்

படிக்க வேண்டிய கால அளவு (திங்கள்)

இணைய வழித்தேர்வு (மதிப்பளவு)

எழுத்துத் தேர்வு (மதிப்பளவு)

மொத்த மதிப்பு அளவு

மதிப்பு விழுக்காடு

HG10
நிலை 1
12
25
75
100
100%
HG20
நிலை 2
12
25
75
100
100%
HG30
நிலை 3
12
25
75
100
100%

4.தேர்வு முறை

சான்றிதழ்க் கல்வி

சான்றிதழ்க் கல்விப் பாடத் திட்டத்தில் பயிலச் சேருவோர் அனைவரும் தேர்வுகளில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தகுதிச் சான்றிதழ் வேண்டுவோர் மட்டும் சான்றிதழ்க் கல்வித் தேர்வுகளில் பங்கு பெறலாம்.

சான்றிதழ்க் கல்விக்கான தேர்வு முறை நான்கு வகைப்படும்

i.
காட்சித் தேர்வு
ii.
வாய்மொழித் தேர்வு
iii.
இணைய வழித் தேர்வு
iv.
எழுத்துத் தேர்வு

அடிப்படை நிலைக்கு மட்டும்

(iii) இணைய வழித் தேர்வு

  • இணைய வழித் தேர்விற்கான வினாக்கள், வினா வங்கியிலிருந்து மாணவர்கள் தேர்வெழுதும் பொழுது, கணினியே தானாகத் தொகுத்து வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • விடைகளைக் கணினியே திருத்தி மதிப்பெண் வழங்கும்.

(iv) எழுத்துத் தேர்வு

  • எழுத்துத் தேர்வினை மாணவர்கள் அவர்களது தொடர்பு மையங்கள் மூலம் எழுத வேண்டும்.
  • கேள்வித் தாள்கள் வடிவமும், வினா வகையும் தொடர்பு மைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னதாகவே அறிவிக்கப்படும். இதனைத் தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் நெறிப்படுத்துவர்.
  • தேர்வுகள் 6 திங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

மேற்சான்றிதழ்க் கல்வி

தேர்வு முறைமை

அ. இணையவழித் தேர்வுகள் - 25 மதிப்பெண்கள்

ஆ. நேரடி எழுத்துத் தேர்வு - 75 மதிப்பெண்கள்

தேர்வுக்குரிய பாடத்திட்டமும் பகிர்வும்

தேர்வு வடிவம்
பாடங்கள்
செய்யுள்
உரைநடை
இலக்கணம்

இணையவழித் தேர்வு - 1

1 - 3

7 - 9

13 - 15

இணையவழித் தேர்வு - 2

4 - 6

10 - 12

16 - 18

நேரடி எழுத்துத் தேர்வு

1 - 6

7 - 12

13 - 18

அ. இணையவழித் தேர்வுகள்

  • தேர்வர்கள் தேர்வு எழுதும்போது, இணையவழித் தேர்வுக்குரிய வினாக்களைக் கணினியே தானாகத் தொகுத்து வழங்கும் வகையில் வினாவங்கி ஒன்று வடிவமைக்கப் பெற்றுள்ளது.
  • விடைகளைக் கணினியே திருத்தி மதிப்பெண்கள் இடும். (மாதிரி வினாத்தாள் காண இங்கே சுட்டுக.)

ஆ. நேரடி எழுத்துத் தேர்வு

  • தேர்வர்கள் அவரவர் எழுத்துத் தேர்வுகளை அவர்களின் தொடர்பு மையங்கள்வழி எழுத வேண்டும்.
  • தேர்வுக்கான வினாத்தாள் தகவல்கள் அவரவர் தொடர்பு மையங்களின் ஆசிரியர்களுக்கும் தேர்வர்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப் பெறும். இதனைத் தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் நெறிப்படுத்துவர். (மாதிரி வினாத்தாள் காண இங்கே சுட்டுக.)
  • தேர்வுகள், ஆறு திங்களுக்கு ஒருமுறை நடத்தப் பெறும்.

5. கட்டண விவரம்

  • சான்றிதழ் மற்றும் மேற்சான்றிதழ்ப் பாடங்களின் பதிவுக்கும், தேர்வுக் கட்டண விவரம் அறிவதற்கும் இங்கே சுட்டுக

6. தேர்ச்சியும், தகுதிச் சான்றிதழும்

  • சான்றிதழ்ப் படிப்பில் தேர்ச்சிப் பெற, இணையவழித் தேர்வுகளிலும் நேர்முகத் தேர்வுகளிலும் சேர்ந்து எடுக்கும் சராசரி மதிப்பெண்கள் குறைந்தது 40 விழுக்காடு இருக்க வேண்டும்.
  • 60% மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் முதல் வகுப்பில் தேறியதாகச் சான்றளிக்கப்படுவர்.
  • 80% மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் சிறப்புத் தகுதி பெற்றவராகச் சான்றளிக்கப்படுவர்.
புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2019 17:43:00(இந்திய நேரம்)