தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkathai - Introduction Page

  • பாடம் - 6

           A01126  பெருங்கதை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை பற்றியது. பெருங்கதையின் மூலநூல் பற்றியும், பெருங்கதையை உரையாசிரியர் கையாண்டுள்ள விதம் பற்றியும் கூறுகிறது. இக்காப்பியத்தின் ஆசிரியர் வரலாறு பற்றிக் கூறுகிறது. காப்பிய அமைப்பு, கவிநயம் ஆகியன பற்றியும் விவரித்துக் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
     

    • தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய பெருங்கதை பற்றிய பொதுவான செய்திகளை அறியலாம்.

    • பெருங்கதை பற்றி உரையாசிரியர்கள் கூறிய பாராட்டு உரைகளை அறியலாம்.

    • பெருங்கதைக்குச் சூட்டப் பெற்ற பெயர் பற்றிய விவரங்களையும் விளக்கங்களையும் அறியலாம்.

    • பெருங்கதையின் மூல நூல் எது என்பது பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

    • பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் வாழ்க்கை வரலாற்றை அறியலாம்.

    • பெருங்கதையின் காப்பிய அமைப்பையும் கதையையும் அறிந்து கொள்ளலாம்.

    • பெருங்கதையில் அமைந்துள்ள கவிநயம், வாழ்வியல் தத்துவங்கள், வருணனைகள், உவமை நலன்கள், உணர்ச்சிகள் முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:27:36(இந்திய நேரம்)