Primary tabs
-
பாடம் - 6இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் சொற்றொடர்களில் திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைத் தெரிவிக்கிறது; அவ்வழுக்களை நீக்கி மொழியைப் பிழையறப் பயன்படுத்தும் வழா நிலைகளைப் பற்றி அறிவிக்கிறது. இலக்கண மரபிற்கு மாறுபட்டதாயினும் வழுவமைதியாகக் கொள்ளவேண்டியவை யாவை, அவற்றிற்கான மொழிச்சூழல்கள் யாவை என்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைப் பற்றி அறியலாம்.
சொற்றொடர்களில் திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றை வழுவின்றிப் பயன்படுத்துவதற்கு உரிய வழாநிலைகளைப் பற்றி அறியலாம்.
மேற்குறித்த திணை முதலான ஏழிலும் இலக்கண முறைமைக்கு மாறுபட்டு வருவனவற்றை, வழுவமைதிகளாகக் கொள்ளும் மொழிச்சூழலைப் பற்றி அறியலாம்.