தொகுப்புரை | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 4.9 தொகுப்புரை  

  மரபு என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது. தொடர்களில் இடம்பெறும், உணவு முதலிய பொதுச் சொற்கள் பெறவேண்டிய வினைச் சொற்களையும், எழுத்து மாறாச் சொற்களையும், இரக்கும் சொற்களையும் மரபாகப் பயன்படுத்தும் முறையை இப்பாடம் உணர்த்துகிறது.

  பல பொருள் குறித்த ஒரு சொல்லைத் தொடரில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவிக்கிறது.

  ஒரு தொடரில் இடம் பெறும் இயற்பெயர், சிறப்புப் பெயர் ஆகியவற்றையும், ஒரு பொருள் குறித்த பல பெயர்களையும், மூவகைப் பெயர்களையும் பயன்படுத்தும் மரபை உணர்த்கிறது.

  இவற்றோடு அடைமொழி, இரக்கும் சொற்கள் ஆகியவற்றைத் தொடர்களில் பயன்படுத்தும் மரபையும் அறிவிக்கிறது.

  1)
  ஒருபொருள் குறித்த பல பெயர்களை எவ்வாறு முடித்தல் வேண்டும்?
  2)
  இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் சொற்றொடர்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
  3)
  சிறப்புப் பெயர்கள் எவற்றின் அடிப்படையில் அமையும்?
  4)
  மூவகைச் சொற்கள் யாவை?
  5)
  விரவுப் பெயர் என்றால் என்ன?

Tags         :