தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.8 தொகுப்புரை  

    இந்தப் பாடம், சொற்றொடர்களில் இடம்பெறும் திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைச் சுட்டிக்காட்டுகிறது.

    வழுக்களை நீக்கி மொழியைப் பிழையறப் பயன்படுத்தும் மொழி மரபுகளான வழா நிலைகளைப் பற்றி அறிவிக்கிறது. 

    சான்றோர்களிடத்தும் மக்களிடத்தும் சில காரணங்களால் இலக்கண மரபிற்கு மாறுபட்டுக் காணப்படும் தொடர்களை ஏற்க வேண்டியதன் மொழிச் சூழல்தான் வழுவமைதி என்பதை உணர்த்துகிறது.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1)
    இடவழு என்றால் என்ன?
    2)
    ஒருமையும் பன்மையும் மயங்கி வரும் வழுவமைதி யாது?
    3)
    காலவழு என்றால் என்ன?
    4)
    மூன்று காலத்திலும் செயல்படும் பொருளை எக்கால வினை கொண்டு முடிக்க வேண்டும்?
    5)
    எந்தெந்தக் காரணங்களுக்காகக் காலவழுவமைதி கூறப்படுகிறது?
    6)
    வினாவழு என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:56:41(இந்திய நேரம்)