தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தளை வகைகள்

  • பாடம் - 4

    D03114 தளை வகைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    வினாவிலும் விடையிலுமாக நடக்கின்ற மொழி (Language) தனிச் சொற்களில் வாழவில்லை. தொடர்ச்சொற்களிலேயே வாழ்கின்றது என்கின்றது. சொற்கள் தம்முள் யாதேனும் ஓர் இயல்பு பற்றித் தொடர்வதனைப் புணர்ச்சி என்பதுபோல நின்றசீரின் ஈற்றசையோடு வந்தசீரின் முதலசை பந்தப்படுவது தளை என்கின்றது. தளையைக் கொண்டுதான் ஓசை அறியப்படுகின்றது; நால்வகை ஓசையையும் உண்டாக்குவது தளையே என்கின்றது. தளைகளைக் காணும்போது வந்த சீர் நின்ற சீராகவும், நின்ற சீர் வந்த சீராகவும் மாறும் என்கின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தளை என்பதன் பொருள் யாது என அறியலாம்.
    • எழுத்திலக்கணம் கூறும் புணர்ச்சியோடு இயைத்து நோக்கித் தளையின் இலக்கணத்தை அறியலாம்.
    • செய்யுள் உறுப்புகளுள் நான்காம் உறுப்பாகிய தளையின் வகைகளை அறியலாம். சீர்களின் பெயரிலேயே தளைகள் சில பெயர் பெற்றுள்ளன என்பதை அறியலாம்.
    • ஓரசையும் சீராகும்; சீராக வரும்போது தளை காணும் முறையை அறியலாம்.
    • பழைய சுவடிகளைப் பதிப்பிப்போர்க்குத் தளை பற்றிய அறிவு, பெரும் பயனை அளிக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 16:20:13(இந்திய நேரம்)