தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொருளணியியல் - VI

  • பாடம் - ஆறு D03146 பொருளணியியல் - VI

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் இருபத்தெட்டாவது அணி முதல் முப்பத்தைந்தாவது அணி வரை கூறப்படும் மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய எட்டு அணிகளைப் பற்றிச் சொல்கிறது.

    இவ்வணிகளின் இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும்     விளக்கமாகவும் சொல்கிறது.

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய அணிகளுக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வணிகள் ஒவ்வொன்றிற்கும் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள் ஆகியவற்றை எல்லாம் எடுத்துக் கூறும் திறம் பெறலாம்.

    அப்பாடல்களில் அமைந்துள்ள அணிகளின் இலக்கணப் பொருத்தத்தை விளக்கிக் காட்டும் ஆற்றலைப் பெறலாம்.

    மேலும் இவ்வணிகளில் சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவதைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டும் திறமை பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 18:41:04(இந்திய நேரம்)