தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

  • கவிழ் தும்பை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Trichodesma indicum (L.) R.Br.

    குடும்பம் : Borginaceae

    வளரிடம் : சாகுபடி, தரிசு நிலங்கள், வெற்றிடத்தில் வேகமாக ஆக்கிரமிக்கின்றன. தமிழ்நாட்டில் சாலையோரங்களில் ஆங்காங்கே தானே வளர்கின்றது.

    வளரியல்பு : தும்பையிலை வடிவில் சொரசொரப்பான வெளிரிய நிறமுடையவை, அல்லிகள் வெளிர் நீலம், மடல்பிரிவில் மஞ்சள் வண்ணச் சுரப்பி புள்ளிகள், மடல்கள் வால்போல் நீண்டவை, நுனியில் பின்னோக்கி வளைந்தவை, மகரந்ததாள்கள் வெளிநோக்கியவை, மகரந்த பைகள் நீள் உரோமங்கள் உடையவை.

    மருத்துவப் பயன்கள: செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. பெரும்பாடு, சீதபேதி, மூட்டுவலி, பால்வினை நோய்க் கட்டிகளுக்குச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
    இலையைத் தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:38:42(இந்திய நேரம்)