தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • ச.பாப்பிநாயக்கன்பட்டி

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    ச.பாப்பிநாயக்கன்பட்டி மதுரை மாவட்டத்தில், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள ஒரு பெருங்கற்கால வாழ்விடமாகும்.

    சிறப்பு

    இந்த இடத்தில் மக்கள் இடைக்கற்காலத்திலிருந்து வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு இரும்புக்காலம் (பெருங்கற்காலம்), வரலாற்றுத் துவக்ககாலம் மற்றும் இடைக்காலச் சான்றுகள் காணப்படுகின்றன.

    அமைவிடம்

    இது மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 55 கி.மீ. தொலைவில் எழுமலை என்ற ஊருக்கு அண்மையில் அமைந்துள்ளது.

    இங்கு நுண்கற்கால மக்கள் முதலில் வாழ்ந்துள்ளனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்க்கை நடத்தியுள்ளனர். இவர்கள் குவார்ட்ஸ் எனப்படும் கற்களைப் பயன்படுத்தி கருவிகளைச் செய்துள்ளனர். இவர்கள் சுரண்டிகள், கூர்முனைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

    வரலாற்றுத் துவக்க காலத்தில் இங்கு வசித்த மக்கள், ஆடு-மாடு வளர்த்து, விவசாயம் செய்து வாழ்ந்துள்ளனர். இவர்கள் கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் இரசட் கலவை (சிவப்பு வண்ணம்) பூசப்பட்டு ஓவியம் தீட்டப்பட்ட பானைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இங்கு தமிழ்- பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

    இங்கு பல ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. கல்வட்டம், கற்சதுரம், தாழி போன்ற ஈமச்சின்ன வகைகள் உள்ளன. இங்குள்ள ஒரு தாழியிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த எலும்புக் கூட்டின் தலையில் ஒரு துளை காணப்படுகின்றது. மாந்தவியல் வல்லுநர் வாலிம்பே, இந்த மனிதரை யாரோ தலையில் வெட்டிய பிறகு. சிலகாலம் வாழ்ந்து.

    பிறகு உயிரிழந்துள்ளார் என்று கருதுகிறார். இது அவர்கள் நாட்டு மருத்துவத்தினைப் பயன்படுத்தியதை மறைமுகமாக உணர்த்துகின்றது. இது ஒரு சிறந்த தொல்லிய சான்றாகும்.

    மேற்கோள் நூல்

    Selvakumar,V. 1996. Archaeological investigations in the Upper Gundar Basin, Madurai District, Tamil Nadu, Man and Enlivenment 21 (2) PP. 27-42

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:02:28(இந்திய நேரம்)