தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • ஆரோக்கிய உணவாகும் கடற்பாசிகள்

    முனைவர் வா. ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    ஆரோக்கிய உணவு என்பது, நமது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆக்க சக்தி அளிக்கும் ஆகாரமாக இருப்பதுடன், உடலில் நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் அல்லது நோய் நிலையில் சீர் செய்யவும் உதவுவது ஆகும். உணவே மருந்தாக அமைவது ஆகும்.


    கடலில் காணப்படும் சிறிய வகை உயிரினத் தாவர வகைகளில் கடற்பாசிகள் அடங்கும். நிறத்தின் தன்மையைக் கொண்டு மூன்று வகைகளாக அதாவது, பச்சை, பழுப்பு மற்றும் சிவப்பு கடற்பாசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
    கடற்பாசிகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் அரிய வேதிமப் பண்புகளுடன், நுண்ணிய தனிமங்களையும் கொண்டுள்ளன. இவை தனித்த அயனிகள் எதிர்ப்பான் திறன், அழற்சி நிவாரணத்திறன், புற்றுச்செல்கள் அழிக்கும் திறன் மற்றும் இரத்த உறைவைத் தடுக்கும் ஆற்றல் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் அழிக்கும் திறன் கொண்டுள்ளது அறிவியல் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


    தற்போது கடற்பாசியிலுள்ள பல் சர்க்கரை அமைப்பைக் கொண்டு அது ஆரோக்கிய உணவாகத் தற்போது பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகின்றது. கடற்பாசியிலுள்ள ‘அல்ஜினேட்’ என்ற சர்க்கரைப் பொருள், கரையும் தன்மையுடைய நார்ச்சத்து வகைகளில் அடங்கும். இது பழுப்பு நிறக் கடற்பாசியில் மிகுந்துள்ளது. இச்சர்க்கரைப் பொருள் பயனுள்ள நுன்ணுயிரிகள் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன. எனவே, கடற்பாசியை உணவாகக் கொள்ளும் போது, அவை குடற்பகுதியில் செரியா நிலையில், கடைக்குடல் பகுதியில் உள்ள பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கமடையச் செய்து அவற்றின் மூலப்பொருட்கள் உற்பத்தியால் தீய நுண்ணுயிரிகள் அழித்தல், சீரான உணவுப் பாதையின் செயல்பாட்டுடன் உடலின் சீரான வேதிம காரணிகள் சமன்பாட்டுடன் செயல்படும் தன்மைக்கும் பெரிதும் உதவுகின்றன. ஆவியாகும் மற்றும் சிறு கொழுப்பு அமிலங்கள் உற்பத்தி மிகுத்தல், குடற்புற்று நோயைத் தடுக்கும் என்றும், மேற்படி கடற்பாசி உணவுகள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் தனித்த அயனிகள் தாக்கத்தைத் தடுக்கும் என்றும் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்றும் அறிவியலால் உறுதி செய்யப்பட்டுள்ளது.


    இன்னும் உண்ணா நோன்பு இருக்கும் காலங்களில் கடற்பாசிகள் கொண்ட உணவு பதார்த்தங்களை இஸ்லாமியர்கள் பயன்படுத்துகின்றனர்.


    கடற்பாசி உணவுகள் உடலுக்குக் குளிர்ச்சியையும் ஆரோக்கியமும் அளிக்கும் மூலப்பொருட்கள் கொண்டு இவற்றை ஆரோக்கிய உணவுகளாகப் பயன்படுத்துதல் நன்மை பயக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:11:26(இந்திய நேரம்)