தாமோதரனார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை


தாமோதரனார் சங்ககாலப் புலவர்கலில் ஒருவர். தாம் ஓது அரன் = தாமே ஓதி ஓதி உணர்ந்துகொண்டிருக்கும் அரன் என்பது இவரது பெயருக்கான விளக்கம். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 92 எண் கொண்ட பாடலாகும்.

இப்பாடல் நெய்தல் திணையாகும். ஞாயிறு மறைந்த பொழுது பறவைகள் தம் குஞ்சுகள் இருக்கும் இடத்துக்குக் குஞ்சுகளுக்கு வேண்டிய இரையுடன் சென்று அடையும். அது போல அவர் இல்லம் வந்து சேரவேண்டும் என்பது தலைவியின் ஏக்கம் ஆகும்.

இதனைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்பர். அவன் மீது உள்ள இடையறா ஆசையால் அவன் நினைவாகவே இருப்பது தான் இது. இவ்வொரு பாடலால் தாமோதரனார் சிறப்பு பெறுகிறார்.