பண்டைத் தமிழ் இலக்கியத்தை அகம், புறம் என்று பிரிப்பர். தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பாடுபவை அக இலக்கியங்கள். வீரம், கொடை, மானம் முதலியவற்றைப் பாடுபவை புற இலக்கியங்கள். பரணி புற இலக்கியம். பாட்டுடைத் தலைவனின் வீரமே இந்த இலக்கியத்தின் மையக் கருவாகும். இது பற்றிப் பன்னிரு பாட்டியல் கூறுவது வருமாறு:
மன்னன் பகைவனது நாட்டை வெல்வதற்காக வஞ்சிப் பூமாலை அணிந்து போர்க்களம் சென்றான். உழிஞைப் பூமாலை அணிந்து பகைவனது மதிலை முற்றுகை இட்டான். தும்பைப் பூமாலையைச் சூடிப் பகைவனுடன் போர் செய்தான். பகை வீரர்கள் மடிந்தனர்; குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பகைவனை வென்றான். இவ்வாறு படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய மன்னனின் வீரத்தைப் புகழ்வதே பரணி இலக்கியம் ஆகும். பரணி, வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதல் இலக்கிய மரபையும் கொண்டு உள்ளது. மகளிரை அழைத்துப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி 'கடைதிறப்பு' எனப்படும். 'தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள்' என்று கூறுவது கடைதிறப்பு ஆகும். இப்பகுதி முழுவதும் காதல் இலக்கிய மரபை அடியொற்றி அமைந்துள்ளது.
(அமர் - போர்; மானவன் - படைவீரன்.) என்று இலக்கண விளக்கம் கூறியுள்ளது. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி - என்பது இதன் பொருள்.
எழுநூறு
யானைகளைக் கொன்ற ஏந்தலை (தலைவனை)ப் பாராட்டுவதே பரணி என்று பன்னிரு பாட்டியல்
கூறியுள்ளது.
(இபம் - யானை, அடுகளம் - போர்க்களம், அட்டால் - கொன்றால், கடன் - முறைமை.) யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி உடையன அல்ல. இதனை,
என்ற பாடலால் அறிய முடிகிறது.
வெண்பாப் பாட்டியல் பரணியின் பாட்டுடைத் தலைவனைப் பற்றிப் பேசியுள்ளது.
(மூரி
- வலிமை, களிறு - யானை, அட்ட - கொன்ற, ஆண்டகை
- வீரன், பரவி - புகழ்ந்து.) பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி நூல்களுக்கும் உரியன, ஒரு சில பரணிகளில் இந்தப்பத்து உறுப்புகள் அல்லாது ஒரு சில உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன. இந்த உறுப்புகள் பண்டைய பரணி நூல்களுக்கே பொருந்தும். பிற்கால நூல்களுக்குப் பொருந்தாது. சான்றுக்குச் சீனத்துப் பரணியை இங்குக் கூறலாம். நண்பர்களே! இனிப் பத்து உறுப்புகள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.
மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள் அனைத்திற்கும் உரியன. இவை அல்லாமல் இந்திரசாலம் (பேயின் மாயாசாலம் பற்றியது), இராசபாரம்பரியம் (சோழர் பரம்பரை பற்றிய விளக்கம்), அவதாரம் (பாட்டுடைத் தலைவனின் பிறப்பு பற்றியது) ஆகிய உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்றன. பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து முதலாக ஒரே அமைப்பாக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. |
பரணி இலக்கியம் பற்றிய தொன்மையான இலக்கணக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. பரணியைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்கால நூலாகக் கொள்ள வேண்டும். சோழர் காலத்தில்தான் பரணி ஓரு தனி இலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றுள்ளது. இந்த இலக்கிய வகையின் தோற்றம் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி இங்குக் காண்போம். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணி நூலே இன்று நமக்குக் கிடைக்கும் முதல் பரணி நூலாகும். இதற்கு முன்பும் பரணி நூல்கள் இருந்துள்ளன. ஆனால் அவை கிடைக்கவில்லை.
1) முதல் இராசேந்திரசோழன்- 11- ஆம் நூற்றாண்டு
- கொப்பத்துப் பரணி மேலே உள்ள பரணி நூல்களைப் பெயர் அளவில் மட்டுமே நாம் அறிகிறோம். |
|