சாதி, சமயச் சண்டைகள், தீண்டாமை, மதுவுண்ணல், வஞ்சனை,
ஏமாற்று, பொறாமை ஆகியவற்றைக் கடுமையாகச் சாடுகின்றார்.
சாதி, சமய வேறுபாடுகளை நீக்கி நாட்டுமக்கள் அனைவரும்
அன்புடன் இருக்க வேண்டும். இதுவே நாட்டுப்பற்றுக்கு அடிப்படை
என்கிறார்.
சமூகம், தேசியம் என்ற முறையில் கவிமணி பாடியுள்ள
பாடல்களுள் அடங்கியுள்ள கருத்துகளைப் பின்வருமாறு
வகைப்படுத்தலாம்.
1) சாதி, மத பேதங்களைக் களைதல்.
2) தீண்டாமையை ஒழித்தல்.
3) ஆதிதிராவிடர்களின் நல்வாழ்வு சிறக்க நாட்டு மக்கள்
செயல்படுதல்.
4) நாட்டு ஒருமைப்பாட்டின் அடிப்படையில் நின்று இந்தியப்
பெரு மக்கள் நாட்டின் உரிமை வாழ்வுக்காகப் போராடுதல்.
5) கடுமையான உழைப்பினால் அரசியல் விடுதலையோடு பொருளாதார
விடுதலையை உருவாக்குதல்.
தீண்டாதோர் விண்ணப்பம் என்ற தலைப்பில் விண்ணப்பம் செய்தோம்
- விடையை
வேண்டிக் கொள்கிறோம்.
கண்ணப்பன் பூசை கொள்ளும்
கடவுள் திருக்கோயிலிலே
நண்ணக் கூடாதோ? நாங்கள்
நடையில் வரல் ஆகாதோ
நந்தனுக்குப் பதமளித்த
நடராசன் கோயிலிலே
வந்தனைகள் செய்து நாங்கள்
வழிபடுதல் முறை அலவோ
(மலரும் மாலையும், 763,741) என்று தன் விண்ணப்பத்தினை எடுத்துரைக்கின்றார்.
வள்ளுவர் என்னும் குடியில் பிறந்தவர் திருவள்ளுவர்.
அவர் உலகப் பொதுமறையாகிய திருக்குறளைத் தந்திருக்கின்றார். புலையர் குலத்தில்
பிறந்தவர் நந்தனார். வேட்டுவக் குடியில் பிறந்த கண்ணப்பன் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
இந்த வரலாறுகளை நினைவுபடுத்தி எச்சாதியாலும், பிறப்பாலும் பெருமை இல்லை. அவன்
செய்யும் செயல்களே பெருமையை நிலைநாட்டுகின்றன என்று கூறுகின்றார். நாயனார் வந்த திருக்குலத்தை
- உயர்
நந்தனார் வந்த பெருங்குலத்தை
தீய குலமெனத் தள்ளுவரேல் - அது
தெய்வம் பொறுக்குஞ் செயலாமோ?
(மலரும் மாலையும், 730)
காப்பாற்றி நம்மையாளும்
கடவுளரும் மக்களுள்ளே
பார்ப்பார்கள் பறையரென்றே
பகுப்பேதும் வைத்ததுண்டோ?
(மலரும் மாலையும்,746) சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள், சாதி வேறுபாடுகள்
இருத்தல்
கூடாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்ற நிலையில்
ஒற்றுமையுடன் இருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் அன்பு
மட்டுமே அடிப்படையாக இருத்தல் வேண்டும். பூசல்களும்
சண்டைகளும் இருத்தல் கூடாது. அப்படிச் சண்டையிடும்
மனிதர்களை நோக்கி
கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு
- சாதி
கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு
பாரதத்தாய் பெற்ற மக்களென்று - நிதம்
பல்லவி பாடிப் பயனெதுவோ
(மலரும் மாலையும்,725) என்று கேட்கின்றார்.
|