496

இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்


  
85.   வரலாற்று வஞ்சி :
 
குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையும்
கீர்த்தியையும் வஞ்சிப்பாவால் கூறுவது.
 
86.   வருக்கக்கோவை :
 
அகரம் முதலாகிய எழுத்து வருக்கம் மொழிக்கு முதலாம்
எழுத்துமுறையே  காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது.  
 
87.   வருக்கமாலை :
 
மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வொரு செய்யுள்
கூறுவது.  
 
88.   வளடல் :
 
அறம் பொருள் இன்பம் ஆகிய அம் முக்கூறுபாட்டின் பயனை
எள்ளி, மங்கையர் திறத்து உறும் காம இன்பத்தினையே பயன் எனக்
கொண்டு, பாட்டுடைத் தலைமகன் இயற்பெயருக்குத் தக்கதை எதுகையாக
நாட்டி ரைத்து, அவ்வெதுகைபடத் தனிச் சொல்இன்றி இன்னிசைக்
கலிவெண்பாவால் தலைமக் இரந்து குறை பெறாது மடல் ஏறுவதாய் ஈரடி
எதுகைவரப் பாடுவது.
 
89.   வாகைமாலை : 
 
மாற்றாரை வென்றுபுகழ் படைத்து வாகைமாலை சூடுவதை
ஆசிரியப்பாவால் கூறுவது.
 
90.   வாதோரணமஞ்சரி :
 
கொலைபுரி மதயானையை வயப்படுத்தி அடக்கினவர்கட்கும், பற்றிப்
பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால்
தொடுத்துப் பாடுவது.