253 124. உறுப்பு நலனழிதல் - Limbs languish | | |
1. சிறுமை நமக்குஒழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். | To lift from want he left me afar His thought makes my eyes blush the flower.
| 1231 | | |
2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். | My pale tearful eyes betray The hardness of my husband, away.
| 1232 | | |
3. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். | These arms that swelled on nuptial day Now shrunk proclaim "He is away".
| 1233 | | |
4. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். | Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave.
| 1234 | | |
5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். | Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty.
| 1235 | | |
6. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. | Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul.
| 1236 | | |
7. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து. | Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find.
| 1237 | | |
8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். | The front of this fair one O paled As my clasping arms loosed their hold.
| 1238 | | |
9. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். | Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once.
| 1239 | | |
10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. | Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair.
| 1240 | | |
|