1. புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. | Feign sulk; embrace him not so that We can see his distress a bit.
| 1301 | | |
2. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். | Sulking is the salt of love; but Too much of it spoils the taste.
| 1302 | | |
3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். | To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved.
| 1303 | | |
4. ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. | To comfort not lady in pout Is to cut the fading plant at root.
| 1304 | | |
5. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. | Pouting of flower-eyed has To pure good mates a lovely grace.
| 1305 | | |
6. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. | Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits.
| 1306 | | |
7. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது தன்றுகொல் என்று. | "Will union take place soon or late?" In lover's pout this leaves a doubt.
| 1307 | | |
8. நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. | What's the good of grieving lament When concious lover is not present?
| 1308 | | |
9. நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. | Water delights in a shady grove And sulking in souls of psychic love.
| 1309 | | |
10. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. | My heart athirst would still unite With her who me in sulking left!
| 1310 | | |
|