269 132. புலவிநுணுக்கம் - Feigned anger | | |
1. பெண்ணியலார் எல்லோரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரந்தநின் மார்பு. | I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed.
| 1311 | | |
2. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. | He sneezed while we went on sulking Expecting me to say "live long".
| 1312 | | |
3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. | "For which lady?" she widely cries While I adorn myself with flowers.
| 1313 | | |
4. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. | "I love you more than all" I said "Than whom, than whom?" she sulked and chid.
| 1314 | | |
5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். | "In this life we won't part" I told Her eyes at once with tears were filled.
| 1315 | | |
6. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். | I said "I thought of you". She left Her embrace crying "Oft you forget".
| 1316 | | |
7. வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. | I sneezed; she blessed; then changed and wept "You sneezed now at which lady's thought?"
| 1317 | | |
8. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. | I repressed sneeze; she wept crying "Your thoughts from me you are hiding".
| 1318 | | |
9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. | I try to coax her and she remarks "Your coaxing others thus this marks".
| 1319 | | |
10. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. | I think and gaze at her; she chides: "On whom your thought just now abides?"
| 1320 | | |
|