271 133. ஊடலுவகை - Sulking charm | | |
1. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. | He is flawless; but I do pout. So that his loving ways show out.
| 1321 | | |
2. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். | Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives.
| 1322 | | |
3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. | Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth?
| 1323 | | |
4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. | In long pout after embrace sweet A weapon is up to break my heart.
| 1324 | | |
5. தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன்று உடைத்து. | Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms.
| 1325 | | |
6. உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | Sweeter than meal is digestion And sulk in love than union.
| 1326 | | |
7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். | The yielder wins in lover's pout Reunited joy brings it out.
| 1327 | | |
8. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | Shall not our pouting again give The dew-browed joy of joint love?
| 1328 | | |
9. ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. | Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells!
| 1329 | | |
10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | Bouderie is lovers' delight Its delight grows when they unite | 1330 | | |
|