147 72. அவையறிதல் - Judging the audience | | |
1. அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | The pure in thought and eloquence Adapt their words to audience.
| 711 | | |
2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். | Who know the art of speech shall suit Their chosen words to time in fact.
| 712 | | |
3. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். | They speak in vain at length who talk Words unversed which ears don't take.
| 713 | | |
4. ஓளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். | Before the bright be brilliant light Before the muff be mortar white.
| 714 | | |
5. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. | Modest restraint all good excels Which argues not before elders.
| 715 | | |
6. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு | Tongue-slip before the talented wise Is like slipping from righteous ways.
| 716 | | |
7. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து. | The learning of the learned shines Valued by flawless scholar-minds.
| 717 | | |
8. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. | To address understanding ones Is to water beds of growing grains.
| 718 | | |
9. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். | O ye who speak before the keen Forgetful, address not the mean.
| 719 | | |
10. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். | To hostiles who wise words utters Pours ambrosia into gutters.
| 720 | | |
|