149 73. அவையஞ்சாமை - Courage before councils | | |
1. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் | The pure fail not in power of words Knowing grand council's moods and modes.
| 721 | | |
2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் | Among scholars he is scholar Who holds scholars with learned lore.
| 722 | | |
3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். | Many brave foes and die in fields The fearless few face wise councils.
| 723 | | |
4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். | Impress the learned with your lore From greater savants learn still more.
| 724 | | |
5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு | Grammar and logic learn so that Foes you can boldly retort.
| 725 | | |
6. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. | To cowards what can sword avail And books to those who councils fail?
| 726 | | |
7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். | Like eunuch's sword in field, is vain His lore who fears men of brain.
| 727 | | |
8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். | Though learned much his lore is dead Who says no good before the good.
| 728 | | |
9. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். | Who fear to face good assembly Are learned idiots, certainly.
| 729 | | |
10. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். | They are breathing dead who dare not Empress before the wise their art.
| 730 | | |
|