151 74. நாடு - The country | | |
1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. | It's country which has souls of worth Unfailing yields and ample wealth.
| 731 | | |
2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. | The Land has large luring treasure Where pests are nil and yields are sure.
| 732 | | |
3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. | It's land that bears pressing burdens And pays its tax which king demands.
| 733 | | |
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு | It is country which is free from Fierce famine, plague and foemen's harm.
| 734 | | |
5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. | Sects and ruinous foes are nil No traitors in a land tranquil.
| 735 | | |
6. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை | The land of lands no ruin knows Even in grief its wealth yet grows.
| 736 | | |
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. | Waters up and down, hills and streams With strong forts as limbs country beams.
| 737 | | |
8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. | Rich yield, delight, defence and wealth Are jewels of lands with blooming health.
| 738 | | |
9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு | A land is land which yields unsought Needing hard work the land is nought.
| 739 | | |
10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு | Though a land has thus every thing It is worthless without a king.
| 740 | | |
|