159 78. படைச்செருக்கு - Military pride | | |
1. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர். | Stand not before my chief, O foes! Many who stood, in stones repose.
| 771 | | |
2. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. | To lift a lance that missed a tusker Is prouder than shaft that hit a hare.
| 772 | | |
3. பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. | Valour is fight with fierce courage Mercy to the fallen is its edge.
| 773 | | |
4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். | At the tusker he flings his lance One in body smiles another chance.
| 774 | | |
5. விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | When lances dart if heroes wink "It is a rout" the world will think.
| 775 | | |
6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. | The brave shall deem the days as vain Which did not battle-wounds sustain.
| 776 | | |
7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | Their anklets aloud jingle their name Who sacrifice their life for fame.
| 777 | | |
8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். | The king may chide, they pursue strife; They fear loss of glory; not life.
| 778 | | |
9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். | Who will blame the heroes that lose Their lives in war to keep their vows?
| 779 | | |
10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. | Such a death shall be prayed for Which draws the tears of the ruler.
| 780 | | |
|