163 80. நட்பாராய்தல் - Testing friendship | | |
1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. | Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease.
| 791 | | |
2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும். | Friendship made without frequent test Shall end in grief and death at last.
| 792 | | |
3. குணனுங் குடிமையும் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு. | Temper, descent, defects and kins Trace well and take companions.
| 793 | | |
4. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு. | Take as good friend at any price The nobly born who shun disgrace.
| 794 | | |
5. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். | Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends.
| 795 | | |
6. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். | Is there a test like misfortune A rod to measure out kinsmen?
| 796 | | |
7. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். | Keep off contacts with fools; that is The greatest gain so say the wise.
| 797 | | |
8. உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ணாற்றறுப்பார் நட்பு. | Off with thoughts that depress the heart Off with friends that in woe depart.
| 798 | | |
9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும். | Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think.
| 799 | | |
10. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீந்தும் ஒருவுக வொப்பிலார் நட்பு. | The blameless ones as friends embarace; Give something and give up the base.
| 800 | | |
|