1. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. | That friendship is good amity Which restrains not one's liberty.
| 801 | | |
2. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். | Friendship's heart is freedom close; Wise men's duty is such to please.
| 802 | | |
3. பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. | Of long friendship what is the use Righteous freedom if men refuse?
| 803 | | |
4. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். | Things done unasked by loving friends Please the wise as familiar trends!
| 804 | | |
5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். | Offence of friends feel it easy As folloy or close intimacy.
| 805 | | |
6. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | They forsake not but continue In friendship's bounds though loss ensue.
| 806 | | |
7. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். | Comrades established in firm love Though ruin comes waive not their vow.
| 807 | | |
8. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். | Fast friends who list not tales of ill Though wronged they say "that day is well".
| 808 | | |
9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு | To love such friends the world desires Whose friendship has unbroken ties.
| 809 | | |
10. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். | Even foes love for better ends Those who leave not long-standing friends.
| 810 | | |
|